குறள்: 370 37. அவா அறுத்தல்

அறத்துப்பால்துறவறவியல்

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேபேரா இயற்கை தரும்

மு. வரதராசனார் உரை

ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை

ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.

மு. கருணாநிதி உரை

இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்

அவா அறுத்தல் அதிகாரம் முழுவதும்