குறள்: 387 39. இறைமாட்சி
இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்தான்கண் டனைத்திவ் வுலகு
மு. வரதராசனார் உரை
இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.
சாலமன் பாப்பையா உரை
இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்.
மு. கருணாநிதி உரை
வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்