குறள்: 388 39. இறைமாட்சி
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கிறையென்று வைக்கப் படும்
மு. வரதராசனார் உரை
நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை
நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.
மு. கருணாநிதி உரை
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்