குறள்: 404 41. கல்லாமை

பொருட்பால்அரசியல்

கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்கொள்ளார் அறிவுடை யார்

மு. வரதராசனார் உரை

கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை

படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

மு. கருணாநிதி உரை

கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்

கல்லாமை அதிகாரம் முழுவதும்