குறள்: 405 41. கல்லாமை

பொருட்பால்அரசியல்

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்துசொல்லாடச் சோர்வு படும்

மு. வரதராசனார் உரை

கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.

சாலமன் பாப்பையா உரை

படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

மு. கருணாநிதி உரை

கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்

கல்லாமை அதிகாரம் முழுவதும்