குறள்: 406 41. கல்லாமை

பொருட்பால்அரசியல்

உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்களரனையர் கல்லா தவர்

மு. வரதராசனார் உரை

கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

சாலமன் பாப்பையா உரை

படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

மு. கருணாநிதி உரை

கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்

கல்லாமை அதிகாரம் முழுவதும்