குறள்: 411 42. கேள்வி

பொருட்பால்அரசியல்

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்செல்வத்து ளெல்லாந் தலை

மு. வரதராசனார் உரை

செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

சாலமன் பாப்பையா உரை

செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.

மு. கருணாநிதி உரை

செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்

கேள்வி அதிகாரம் முழுவதும்