குறள்: 412 42. கேள்வி

பொருட்பால்அரசியல்

செவிக்குண வில்லாத போழ்து சிறிதுவயிற்றுக்கும் ஈயப் படும்

மு. வரதராசனார் உரை

செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.

சாலமன் பாப்பையா உரை

செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.

மு. கருணாநிதி உரை

செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்

கேள்வி அதிகாரம் முழுவதும்