குறள்: 419 42. கேள்வி

பொருட்பால்அரசியல்

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கியவாயின ராத லரிது

மு. வரதராசனார் உரை

நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.

சாலமன் பாப்பையா உரை

நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.

மு. கருணாநிதி உரை

தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது

கேள்வி அதிகாரம் முழுவதும்