குறள்: 420 42. கேள்வி

பொருட்பால்அரசியல்

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்அவியினும் வாழினு மென்

மு. வரதராசனார் உரை

செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.

சாலமன் பாப்பையா உரை

செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?

மு. கருணாநிதி உரை

செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்

கேள்வி அதிகாரம் முழுவதும்