குறள்: 422 43. அறிவுடைமை
சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇநன்றின்பா லுய்ப்ப தறிவு
மு. வரதராசனார் உரை
மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.
சாலமன் பாப்பையா உரை
மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு.
மு. கருணாநிதி உரை
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்