குறள்: 431 44. குற்றங்கடிதல்

பொருட்பால்அரசியல்

செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்பெருக்கம் பெருமித நீர்த்து

மு. வரதராசனார் உரை

செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை

தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.

மு. கருணாநிதி உரை

இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்

குற்றங்கடிதல் அதிகாரம் முழுவதும்