குறள்: 434 44. குற்றங்கடிதல்

பொருட்பால்அரசியல்

குற்றமே காக்க பொருளாகக் குற்றமேஅற்றந் தரூஉம் பகை

மு. வரதராசனார் உரை

குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.

மு. கருணாநிதி உரை

குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்

குற்றங்கடிதல் அதிகாரம் முழுவதும்