குறள்: 440 44. குற்றங்கடிதல்

பொருட்பால்அரசியல்

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்ஏதில ஏதிலார் நூல்

மு. வரதராசனார் உரை

தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.

சாலமன் பாப்பையா உரை

தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும்.

மு. கருணாநிதி உரை

தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும்

குற்றங்கடிதல் அதிகாரம் முழுவதும்