குறள்: 447 45. பெரியாரைத் துணைக்கோடல்
இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரேகெடுக்குந் தகைமை யவர்
மு. வரதராசனார் உரை
கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.
சாலமன் பாப்பையா உரை
தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?
மு. கருணாநிதி உரை
இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?