குறள்: 448 45. பெரியாரைத் துணைக்கோடல்

பொருட்பால்அரசியல்

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பா ரிலானுங் கெடும்

மு. வரதராசனார் உரை

கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை

தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.

மு. கருணாநிதி உரை

குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்

பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரம் முழுவதும்