குறள்: 456 46. சிற்றினம் சேராமை

பொருட்பால்அரசியல்

மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்கில்லைநன் றாகா வினை

மு. வரதராசனார் உரை

மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.

மு. கருணாநிதி உரை

மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்

சிற்றினம் சேராமை அதிகாரம் முழுவதும்