குறள்: 457 46. சிற்றினம் சேராமை
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்எல்லாப் புகழுந் தரும்
மு. வரதராசனார் உரை
மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை
நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.
மு. கருணாநிதி உரை
மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்