குறள்: 458 46. சிற்றினம் சேராமை
மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்கினநலம் ஏமாப் புடைத்து
மு. வரதராசனார் உரை
மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை
மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.
மு. கருணாநிதி உரை
மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்