குறள்: 459 46. சிற்றினம் சேராமை

பொருட்பால்அரசியல்

மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்இனநலத்தி னேமாப் புடைத்து

மு. வரதராசனார் உரை

மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.

மு. கருணாநிதி உரை

நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்

சிற்றினம் சேராமை அதிகாரம் முழுவதும்