குறள்: 461 47. தெரிந்து செயல்வகை

பொருட்பால்அரசியல்

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமுஞ் சூழ்ந்து செயல்

மு. வரதராசனார் உரை

(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.

மு. கருணாநிதி உரை

எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்

தெரிந்து செயல்வகை அதிகாரம் முழுவதும்