குறள்: 461 47. தெரிந்து செயல்வகை
மு. வரதராசனார் உரை
(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
ஒருவன் மேற்கொள்ளும் செயல்களை ஆராய்ந்து செய்யும் திறத்தினைக் கூறுவது தெரிந்து செயல் வகை அதிகாரம். தக்கவர்களைக் கலந்து தொடங்கி தொழில்நுட்பம் தெரிந்தவர்களின் துணைக்கொண்டு செய்யப்படவேண்டும் என்கிறது.
குறள்: 461 47. தெரிந்து செயல்வகை
(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
குறள்: 462 47. தெரிந்து செயல்வகை
ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.
குறள்: 463 47. தெரிந்து செயல்வகை
பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.
குறள்: 464 47. தெரிந்து செயல்வகை
இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.
குறள்: 465 47. தெரிந்து செயல்வகை
செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.
குறள்: 466 47. தெரிந்து செயல்வகை
ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.
குறள்: 467 47. தெரிந்து செயல்வகை
(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளையும் எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
குறள்: 468 47. தெரிந்து செயல்வகை
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.
குறள்: 469 47. தெரிந்து செயல்வகை
அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.
குறள்: 470 47. தெரிந்து செயல்வகை
தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.