குறள்: 463 47. தெரிந்து செயல்வகை

பொருட்பால்அரசியல்

ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினைஊக்கா ரறிவுடை யார்

மு. வரதராசனார் உரை

பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை

வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.

மு. கருணாநிதி உரை

பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்

தெரிந்து செயல்வகை அதிகாரம் முழுவதும்