குறள்: 469 47. தெரிந்து செயல்வகை
நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்பண்பறிந் தாற்றாக் கடை
மு. வரதராசனார் உரை
அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை
அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.
மு. கருணாநிதி உரை
ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்