குறள்: 468 47. தெரிந்து செயல்வகை

பொருட்பால்அரசியல்

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்றுபோற்றினும் பொத்துப் படும்

மு. வரதராசனார் உரை

தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.

சாலமன் பாப்பையா உரை

ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.

மு. கருணாநிதி உரை

எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்

தெரிந்து செயல்வகை அதிகாரம் முழுவதும்