குறள்: 467 47. தெரிந்து செயல்வகை
எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்எண்ணுவ மென்ப திழுக்கு
மு. வரதராசனார் உரை
(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளையும் எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.
மு. கருணாநிதி உரை
நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு