குறள்: 466 47. தெரிந்து செயல்வகை

பொருட்பால்அரசியல்

செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும்

மு. வரதராசனார் உரை

ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை

செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.

மு. கருணாநிதி உரை

செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்

தெரிந்து செயல்வகை அதிகாரம் முழுவதும்