குறள்: 482 49. காலமறிதல்

பொருட்பால்அரசியல்

பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்தீராமை ஆர்க்குங் கயிறு

மு. வரதராசனார் உரை

காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

சாலமன் பாப்பையா உரை

காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.

மு. கருணாநிதி உரை

காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்

காலமறிதல் அதிகாரம் முழுவதும்