49. காலமறிதல்

காலம் கருதாமல் மேற்கொள்ளப்படும் எந்த் முயற்சிக்கும் வெற்றி வாய்ப்பு மிகக் குறைவு. காலம் அறிதல் என்பது செயலுக்கேற்ற காலத்தை உணர்தலைக் குறிப்பது. இது ஓடிக்கொண்டிருக்கும் காலத்தில் வாய்ப்பான நேரம் காண்பதைப் பற்றியது. பருவகாலங்களின் அதாவது கொடியவெயில், பெருமழை, கடுங்குளிர், வேகமானகாற்று போன்றவற்றின் இடையீடுகள் , செயல்படுவதற்கான சுற்றுச் சூழல்கள் இவற்றைக் கணித்தல் காலமறிதலில் அடங்கும்..மாறிக்கொண்டேவரும் காலச் சூழ்நிலைகளுக்கேற்ப செயல் மேற்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லும் அதிகாரம்.