குறள்: 484 49. காலமறிதல்

பொருட்பால்அரசியல்

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்கருதி இடத்தாற் செயின்

மு. வரதராசனார் உரை

(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

சாலமன் பாப்பையா உரை

ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.

மு. கருணாநிதி உரை

உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்

காலமறிதல் அதிகாரம் முழுவதும்