குறள்: 485 49. காலமறிதல்

பொருட்பால்அரசியல்

காலங் கருதி இருப்பர் கலங்காதுஞாலங் கருது பவர்

மு. வரதராசனார் உரை

உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.

சாலமன் பாப்பையா உரை

பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.

மு. கருணாநிதி உரை

கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்

காலமறிதல் அதிகாரம் முழுவதும்