குறள்: 491 50. இடனறிதல்
மு. வரதராசனார் உரை
முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது.
இடனறிதல் என்பது தன் செயல்களுக்கு ஏற்ற இடத்தை அறிந்து கொள்ளுதல் குறித்தது. செயல் நிறைவேற்றுவதற்கு வலியும் காலமும் தவிர்த்து இடமும் இயைய வேண்டுமாதலால் வலியறிதல், காலமறிதல் அதிகாரங்களுக்குப் பின் இடனறிதல் அதிகாரம் வைக்கப்பட்டது. மேற்கொண்ட செயல் வெற்றி பெறுதற்குத் தனக்கானதுமாய், மாற்றார்ர்க்கு ஆகாததுமாய் இருக்கிற இடத்தை அறிந்து நடந்து கொள்ளுவது பற்றிச் சொல்கிறது இது.
குறள்: 491 50. இடனறிதல்
முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது.
குறள்: 492 50. இடனறிதல்
மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.
குறள்: 493 50. இடனறிதல்
தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்,
குறள்: 494 50. இடனறிதல்
தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.
குறள்: 495 50. இடனறிதல்
ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்.
குறள்: 496 50. இடனறிதல்
வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.
குறள்: 497 50. இடனறிதல்
(செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.
குறள்: 498 50. இடனறிதல்
சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.
குறள்: 499 50. இடனறிதல்
அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.
குறள்: 500 50. இடனறிதல்
வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.