குறள்: 498 50. இடனறிதல்

பொருட்பால்அரசியல்

சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்ஊக்கம் அழிந்து விடும்

மு. வரதராசனார் உரை

சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.

சாலமன் பாப்பையா உரை

பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.

மு. கருணாநிதி உரை

சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்

இடனறிதல் அதிகாரம் முழுவதும்