குறள்: 497 50. இடனறிதல்

பொருட்பால்அரசியல்

அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமைஎண்ணி யிடத்தாற் செயின்

மு. வரதராசனார் உரை

(செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.

சாலமன் பாப்பையா உரை

செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை.

மு. கருணாநிதி உரை

ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை

இடனறிதல் அதிகாரம் முழுவதும்