குறள்: 506 51. தெரிந்து தெளிதல்

பொருட்பால்அரசியல்

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்பற்றிலர் நாணார் பழி

மு. வரதராசனார் உரை

சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை

உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார்.

மு. கருணாநிதி உரை

நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்

தெரிந்து தெளிதல் அதிகாரம் முழுவதும்