குறள்: 507 51. தெரிந்து தெளிதல்

பொருட்பால்அரசியல்

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்பேதைமை எல்லாந் தரும்

மு. வரதராசனார் உரை

அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.

சாலமன் பாப்பையா உரை

அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும்.

மு. கருணாநிதி உரை

அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்

தெரிந்து தெளிதல் அதிகாரம் முழுவதும்