குறள்: 518 52. தெரிந்து வினையாடல்

பொருட்பால்அரசியல்

வினைக்குரிமை நாடிய பின்றை அவனைஅதற்குரிய னாகச் செயல்

மு. வரதராசனார் உரை

ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.

மு. கருணாநிதி உரை

ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்

தெரிந்து வினையாடல் அதிகாரம் முழுவதும்