குறள்: 511 52. தெரிந்து வினையாடல்
மு. வரதராசனார் உரை
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.
தலைவன் வினைக்கான அதிகாரங்களைச் செயல்வல்லாரிடம் ஒப்படைப்பதையும், செயல் முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருவது பற்றியும் கூறும் அதிகாரம். தெளியப்பட்டாரைச் செயலுக்குரியராகச் செய்வதும் அவர் செயற்பாடுகளை எவ்விதம் மேலாண்மை செய்வது என்பதையும் சொல்கிறது. எவ்வளவுதான் ஆய்ந்தெடுத்தாலும் வினையில் அமர்ந்தபின் மாறாக நடப்பவர்களும் உண்டு என்று எச்சரிக்கிறது ஒரு பாடல். செயலாளனுக்கு முழு உரிமை அளிக்க வேண்டும், கருமமே கண்ணாக உள்ளவனைத் ஆதாரம் இல்லாமல் ஐயம் கொள்ளக்கூடாது, வினைசெய்வான் செயல்வகை பற்றி நாளும் சீராய்வு செய்க என்பன போன்ற செம்மையான மேலாண்மைக் குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
குறள்: 511 52. தெரிந்து வினையாடல்
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.
குறள்: 512 52. தெரிந்து வினையாடல்
பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.
குறள்: 513 52. தெரிந்து வினையாடல்
அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.
குறள்: 514 52. தெரிந்து வினையாடல்
எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.
குறள்: 515 52. தெரிந்து வினையாடல்
(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.
குறள்: 516 52. தெரிந்து வினையாடல்
செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.
குறள்: 517 52. தெரிந்து வினையாடல்
இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
குறள்: 518 52. தெரிந்து வினையாடல்
ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.
குறள்: 519 52. தெரிந்து வினையாடல்
மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.
குறள்: 520 52. தெரிந்து வினையாடல்
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.