குறள்: 532 54. பொச்சாவாமை

பொருட்பால்அரசியல்

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைநிச்ச நிரப்புக்கொன் றாங்கு

மு. வரதராசனார் உரை

நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.

சாலமன் பாப்பையா உரை

நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்.

மு. கருணாநிதி உரை

நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்

பொச்சாவாமை அதிகாரம் முழுவதும்