குறள்: 533 54. பொச்சாவாமை
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்தெப்பானூ லோர்க்குந் துணிவு
மு. வரதராசனார் உரை
மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.
சாலமன் பாப்பையா உரை
மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.
மு. கருணாநிதி உரை
மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்