குறள்: 536 54. பொச்சாவாமை

பொருட்பால்அரசியல்

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமைவாயின் அதுவொப்ப தில்

மு. வரதராசனார் உரை

யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை.

மு. கருணாநிதி உரை

ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது

பொச்சாவாமை அதிகாரம் முழுவதும்