குறள்: 537 54. பொச்சாவாமை

பொருட்பால்அரசியல்

அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்கருவியாற் போற்றிச் செயின்

மு. வரதராசனார் உரை

மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.

மு. கருணாநிதி உரை

மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை

பொச்சாவாமை அதிகாரம் முழுவதும்