குறள்: 539 54. பொச்சாவாமை

பொருட்பால்அரசியல்

இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

மு. வரதராசனார் உரை

தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

தம் மகிழ்ச்சியில் மனவலிமை பெறும்பொழுது எல்லாம் முற்காலத்தில் மகிழ்ச்சியால் மறதி கொண்டு அழிந்தவர்களை நினைவிற் கொள்க.

மு. கருணாநிதி உரை

மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்

பொச்சாவாமை அதிகாரம் முழுவதும்