குறள்: 540 54. பொச்சாவாமை

பொருட்பால்அரசியல்

உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்உள்ளிய துள்ளப் பெறின்

மு. வரதராசனார் உரை

ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.

சாலமன் பாப்பையா உரை

நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது.

மு. கருணாநிதி உரை

கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்

பொச்சாவாமை அதிகாரம் முழுவதும்