குறள்: 551 56. கொடுங்கோன்மை

பொருட்பால்அரசியல்

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டல்லவை செய்தொழுகும் வேந்து

மு. வரதராசனார் உரை

குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.

சாலமன் பாப்பையா உரை

குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.

மு. கருணாநிதி உரை

அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்

கொடுங்கோன்மை அதிகாரம் முழுவதும்