குறள்: 552 56. கொடுங்கோன்மை

பொருட்பால்அரசியல்

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்கோலொடு நின்றான் இரவு

மு. வரதராசனார் உரை

ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம்.

மு. கருணாநிதி உரை

ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது

கொடுங்கோன்மை அதிகாரம் முழுவதும்