குறள்: 573 58. கண்ணோட்டம்

பொருட்பால்அரசியல்

பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்கண்ணோட்டம் இல்லாத கண்

மு. வரதராசனார் உரை

பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை

பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?

மு. கருணாநிதி உரை

இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்

கண்ணோட்டம் அதிகாரம் முழுவதும்