குறள்: 574 58. கண்ணோட்டம்

பொருட்பால்அரசியல்

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்கண்ணோட்டம் இல்லாத கண்

மு. வரதராசனார் உரை

தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.

சாலமன் பாப்பையா உரை

வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?

மு. கருணாநிதி உரை

அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும்

கண்ணோட்டம் அதிகாரம் முழுவதும்