குறள்: 575 58. கண்ணோட்டம்

பொருட்பால்அரசியல்

கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்புண்ணென் றுணரப் படும்

மு. வரதராசனார் உரை

ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.

மு. கருணாநிதி உரை

கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும் இல்லையானால் அது கண் அல்ல; புண்

கண்ணோட்டம் அதிகாரம் முழுவதும்