குறள்: 592 60. ஊக்கம் உடைமை
உள்ள முடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும்
மு. வரதராசனார் உரை
ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.
சாலமன் பாப்பையா உரை
மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.
மு. கருணாநிதி உரை
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது